அரியலூர்: அரியலூரில் நேற்று இரவு சாலையில் போகும் லாரிகளில் இருந்து ஜல்லிகள் கொட்டி கிடந்ததால் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது.
அப்பொழுது அந்த வழியாக சென்ற நமது அரியலூர் காவலர் எப்பொழுதும் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்ட திரு.உதயகுமார் SI அவர்கள் விபத்து ஏற்பட்டவருக்கு, தண்ணீர் கொடுத்து கை கால்களை நீவிவிட்டு உதவினார்.
உதவியது மட்டுமல்லாமல் அங்கு கொட்டிக் கிடந்த ஜல்லிகளையும் அப்புறபடுத்து தூய்மை செய்தனர். கடமையை மனிதாபிமானத்தோடு பணி செய்யும் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு அங்கிருந்தோர் பாராட்டினர்.
லாரி ஓட்டுனர்கள் இது போன்ற லாரியிலிருந்து ஜல்லி விழும்படி ஏற்றி செல்லாமல் தார்ப்பாய்களை நன்கு கட்டி செல்வது நல்லது இதுபோன்ற விபத்து ஏற்படாமல் இருக்கும்…!