மதுரை : உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்த காவலருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மதுரை மாநகர், ஜெயவிலாஸ் மேம்பாலத்திற்கு கீழ் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்துவிட்டார். அவரது உடலை உறவினர்கள் யாரும் உரிமை கோர வராத காரணத்தினால்¸ அவனியாபுரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. பாண்டி மற்றும் காவலர் 3346 திரு. சரவணகுமார் இருவரும் இணைந்து முழு மரியாதையுடன் மதுரை தத்தனேரி இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர். காவலர்களின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினருடன் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாகவும் எங்கள் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
திரு.சேவியர்
மதுரை மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
மதுரை.