தென்காசி : தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா அனைந்த பெருமாள் நாடாரூரை சேர்ந்த ஒரு பெண் கணவனை இழந்து இரண்டு பெண்குழந்தைகள் மற்றும் ஒரு மகனுடன் குடிசைவீட்டில் வசித்து வந்த நிலையில் பெண்ணின் குடிசை வீடு சில தினங்களுக்கு முன்பு காலை 5 மணிக்கு திடீரென்று தீபிடித்து எரிந்தது.
வாழ்வே சூனியமாகி நின்ற குடும்பத்தலைவிக்கு ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் உடனடியாக தேவையான உதவிகளை செய்தார் உதவி ஆய்வாளர் திரு.தமிழரசன் அவர்கள் மக்களின் நண்பன் என்பதை ஆங்காங்கே பல காவல்துறை நட்புகள் உறுதி செய்து வருகின்றனர்.
அதில் தற்போது திரு.தமிழரசன்…(உதவி ஆய்வாளர்) (ஆழ்வார்குறிச்சி காவல் நிலையம்) என்பவர் செய்த செயல் மனித நேயத்தையும் காவல்துறையின் செயல்பாட்டையும் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.
மேலும் தீக்கிரையான போது இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் கண்களில் அவர்கள் நிலை கண்டு நீர் கோர்த்தது உடனே அக்கம்பக்கத்திமரை அழைத்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்தார். அத்தோடு அவர்களுக்கு தேவையான சில பொருட்களையும் வாங்கினார்.
அத்தோடு நில்லாமல் சக காவலர்கள் சமூக சேவகர்கள்.மற்றும் மழை நண்பர்குழு நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு நிலையை எடுத்து கூறினார், உடனடியாக மழை நண்பர்கள் குழுவினரும் அவர்களுக்கு தேவையான உடைகள் அரிசி மளிகை என அனைத்தையும் எடுத்து அங்கு காவல்துறையினருடன் சேர்ந்து அளித்தனர்.
அப்போது உதவி ஆய்வாளர் இந்த வீட்டை உடனடியாக செப்பனிட்டு தரவும் அதற்கான முயற்சிகளை செய்யவும் தேவையான உதவிகளை அவரும் செய்வதாக மழை நண்பர்கள் குழுவிடம் கூறினார். விரைவில் இதனை செய்து தருவோம் என கூறி அந்த வீட்டிற்கான பணிகளும் துவங்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.
தற்போது தமிழரசனையும் மழை நண்பர்கள்குழுவினரையும் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அழகுதுரை மற்றும் உதவிசெய்த அனைவரையும் அந்த பகுதி மக்கள் வாழ்த்தியும் பாராட்டியும் வருகின்றனர்.
தென்காசியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜோசப் அருண் குமார்