கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் உடல் நலம் சரியில்லாமல் தரையில் விழுந்து தவித்த முதியவரை கவனித்த காவல் ஆய்வாளர் எல்வின் ஜோஸ், எந்தவித தாமதமின்றி உடனடி உதவிக்கு முனைந்தார். முதியவரின் நலனை உறுதிப்படுத்தி, உடனே ஆம்புலன்ஸ் அழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். காவல்துறை பணியில் மனிதநேயத்தின் முகம் காட்டிய எல்வின் ஜோஸின் செயலுக்கு பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சமூக பொறுப்புடன் செயல்படும் இப்படிப்பட்ட அதிகாரிகள் காவல்துறையின் கண்ணியத்தை உயர்த்துகின்றனர்.
கன்னியாகுமரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. ஷேக் பாசில்