திருவாரூர்: திருவாரூர் நகர காவல் சரகம் மருதபட்டினம் பகுதியில் அமைந்துள்ள வீடற்ற ஆதரவற்றவர்கள் இல்லத்தில் வசித்துவரும் ஆதரவற்ற முதியவர்கள் 25 பேருக்கும்,திருவாரூர் நகரபகுதியில் ஆதரவற்று உணவின்றி சுற்றித்திரியும் முதியவர்கள்30 பேருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் இன்று (13.06.21) மாலைநேரில் சென்று அனைவரையும் அன்போடு நலம் விசாரித்து அவர்களுக்கு உணவு,பழங்கள்,பிஸ்கட், கேக்,மருந்துகள், சுத்தமான குடிநீர் மற்றும் உடைகள் ஆகியவற்றை வழங்கினார்கள்.
மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உணவின்றி ஆதரவற்று சுற்றித்திரியும் அனைவருக்கும் மாவட்ட காவல்துறை சார்பில்உணவு, மருந்து போன்றவற்றை தினசரி வழங்கி அன்னை போல் காத்து மனிதநேயத்துடன் செயல்பட்ட அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா