திருவாரூர்: நன்னிலம் காவல் சரகம் நன்னிலம் நெடுஞ்சாலைரோந்து (2) காவலர்கள் சன்னாநல்லூர் ரயில்வே கேட் அருகே இன்று(10.06.21) மாலை 16.30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக இருச்சக்கர வாகனத்தில் வந்த தம்பதிகள் திரு.முத்துக்குமாரசாமி திருமதி.மெல்மா கீழசன்னாநல்லூர் ஆகியோரின் பெண்குழந்தை சுகன்யா ( ஒன்றரை வயது) திடீரென உடல்நிலை சரியில்லாமல் நடுவழியில் வலிப்பு ஏற்பட்டுள்ளது.
பெற்றோர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு பரிதவித்து நின்றநிலையில் இதனை கண்ட நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் உடனடியாக அந்த குழந்தையை ரோந்து காவல் வாகனத்தில் ஏற்றி நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் சென்று குழந்தையை சிகிச்சைக்கு சேர்த்து மனிதநேயத்துடன் செயல்பட்டுள்ளனர்.
காவலர்களின் இச்செயலால் உயிருக்கு போராடிய அக்குழந்தை தற்போது நலமாக உள்ளது.
காவல்பணியில் மனிதநேயத்துடன் செயல்பட்ட
1)SSI திரு.செல்வராஜ்
2)த.கா.1159 திரு.ராஜேந்திரன்
3)மு.நி.கா.1420 திரு.புகழேந்தி
4)காவலர் 268 திரு.திருநாவுக்கரசு
(வாகன ஓட்டுனர்)
ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் பாராட்டினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா