மதுரை : மகன் நோய்வாய்ப்பட்டதால்மனமுடைந்த தந்தை தற்கொலை செய்து கொண்டார். திருப்பரங்குன்றம் ஆர்வி பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார் 56 இவரது மகன் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இதற்கான சிகிச்சை அளித்தும் அவருக்கு குணமடையவில்லை .இதனால் மனமுடைந்து காணப்பட்ட செல்வகுமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி