பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் சென்னை to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் கிராமம் அருகே 21 ஆண்டுகளாக வீட்டைவிட்டு பிரிந்து மனநலம் பாதிக்கப்பட்டு ரோட்டில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த பாபு சீங் @ கௌச்ரன் என்பவரை கடந்த 11.12.2015 அன்று வேலா கருணை இல்லத்தின் மூலம் மீட்கப்பட்டு மாவட்ட மனநல மருத்துவரிடம் பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் வேலா கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டு மருத்துவரின் ஆலோசனைப்படி மனநலத்திற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு அவரின் சிந்தனை நல்வழிப் படுத்துவதற்கு தொழில் பயிற்சி செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்குப்பின் பாபு சிங் @ கௌச்ரன் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் கோகாதி, பிலாஸ்பூர், சட்டீஷ்கர் மாநிலத்தில் வசிக்கும் அவரது மகன் அஜ்ராம்கன்டி என்பவர்க்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பாபுசிங்கை அவரது மகன் அஜ்ராம்கன்டியிடம் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் முன்னிலையில் வேலா கருணை இல்லத்தின் நிர்வாகி பி.அருண்குமார் அவர்கள் தக்க ஆவணங்களை பெற்றுக் கொண்டு அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அப்போது பெரம்பலூர் மாவட்ட ஆட்கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. சுப்புலட்சுமி, உதவி ஆய்வாளர் திருமதி. விஜயலட்சுமி, உதவி ஆய்வாளர் திரு.கலையரசன் மற்றும் த.கா சுகண்யா ஆகியோர்கள் உடனிருந்தார்கள்.
மேலும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் வேலா கருணை இல்லத்தில் உள்ள நபர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அளிக்கப்பட்டது.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி