கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் சரக பகுதிகளில் 28.10.2021-ம் தேதி சுமார் 25 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி திரிவதாக கிடைத்த தகவலின் பேரில் அரவக்குறிச்சி வட்ட ஆய்வாளர் திரு. K.ஈஸ்வரன் அவர்களும் அரவக்குறிச்சி காவல் நிலைய Women Desk பெண் காவலர் த.கா 1782 திருமதி.பிரியா, பெ.கா 235 திருமதி.பேபி மூவரும் உடனே சென்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்க்கு உணவு, உடைகள் கொடுத்து அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து பின்னர் கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.