திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வர்த்தக நிறுவனங்கள் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆதரவின்றி உணவின்றி தவித்து வரும் அனைவருக்கும் பல்வேறு தரப்பினரும் உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். போலீசாரும் ஆதரவற்றோருக்கு தினமும் உணவு வழங்கி வருகின்றனர். இந்நிலையில்திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு போலீஸ் ஏட்டு முத்து உடையார் உதவினார். அவருக்கு உணவளித்தார். அவரை அழைத்துச் சென்று முடி வெட்டி அவரை குளிக்க வைத்து ஆடை கொடுத்து அணியச் செய்தார். தன்னலம் கருதாமல் செய்த சேவையை அறிந்த டி.ஐ.ஜி முத்துசாமி, முத்து உடையாரை நேரில் அழைத்து சான்றிதழ் அளித்து பாராட்டினார்.
டி.ஐ.ஜி கூறியதாவது: போலீசாருக்கு உங்கள் சேவை மூலம் நல்ல பெயர் கிடைத்துள்ளது. மக்களிடம் நல்ல பெயரை நீங்கள் வாங்க. தினமும் தொண்டு செய்ய வேண்டும். உங்கள் தொண்டு உள்ளம் ,பலரை வாழ வைக்கும். உங்கள் வாழ்வைசிறக்க வைக்கும், என்றார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா