தருமபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ராஜீவ் நகர் பகுதியில் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வதாக பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.இமயவரம்பன், அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பென்னாகரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.முத்தமிழ்செல்வன், அவர்கள் தலைமையில் போலீசார் ராஜூவ் நகர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த லட்சுமி (57), கிருஷ்ணம்மாள் (34), முனிராஜ் (50), இளங்கோவன் (38). ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சுமார் 567 மது பாட்டில்களை பறிமுதல் செய்து மேற்கண்ட நபர்களை கைது செய்தனர். மேலும் ரவி மற்றும் மகேஷ்வரி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
















