திருச்சி : திருச்சி மாவட்ட காவல் துறை மற்றும் திருச்சி எஸ் ஆர் எம் கல்வி குழுமம் இணைந்து ‘காவலன் செயலி” பற்றிய விளக்கக் கூட்டம் திருச்சி எஸ் ஆர் எம் வளாகத்தில் இன்று (03.01.2020) நடைபெற்றது. விழாவினை திருச்சி மற்றும் ராமாபுரம் எஸ் ஆர் எம் குழுமத் தலைவர் டாக்டர் சிவகுமார் அவர்கள் துவக்கி வைத்தார்.
மேற்படி, விழாவில் எஸ் ஆர் எம் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ஜேசுதாஸ் வரவேற்புரை ஆற்றினார். மத்திய மண்டல காவல் துறை தலைவர் டாக்டர். அமல்ராஜ், இ.கா.ப அவர்கள் சிறப்புரையாற்றி காவலன் செயலியின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, இவ்விழாவில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் பெண் ஊழியர்கள் காவலன் செயலியை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டனர். பின்னர், எஸ் ஆர் எம் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரமேஷ் பாபு மற்றும் திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் திரு. பாலகிருஷ்ணன், இ.கா.ப அவர்கள் பாராட்டுரை வழங்கினர். இறுதியாக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஜியாவுல் ஹக், இ.கா.ப அவர்கள் நன்றியுரையாற்றினார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி