திருச்சி : உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மத்திய மண்டலம் திருச்சி மாநகரம் சிறப்பு காவல்படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவலர்களுக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் அவர்கள் தலைமையில் காவல்துறை குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது
இந்த முகாமில் மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திருச்சி மாநகர காவல் ஆணையர் காவல்துறை துணை தலைவர்கள் திருச்சி மற்றும் தஞ்சாவூர் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை தளவாய் அவர்களும் கலந்து கொண்டனர்
இந்தக் குறை தீர்ப்பு முகாமில் மொத்தம் ஆயிரத்து 650 மனுக்கள் காவலர்களிடம் நேரடியாக காவல் துறை இயக்குனர் திரு சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களால் பெறப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது நிகழ்ச்சியில் மத்திய மண்டலம் மற்றும் திருச்சி மாநகர காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றி திறம்பட செயல்பட்டு பல முக்கிய வழக்குகளை கண்டு கண்டு பிடித்த மத்திய மண்டலத்தில் 23 திருச்சி மாநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் வெகுமதி அளித்து பாராட்டினார்
மேலும் மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களை காப்பாற்ற தன் உயிரை துச்சமாக நினைத்து பிற உயிரைக் காப்பாற்றி வீரதீர செயல் புரிந்த 12 பொதுமக்களை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் திரு தர் சைலேன்திர பாபு அவர்கள் பாராட்டு வெகுமதி அளித்தார்
அதில் குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை கால்வாயில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 15 வயது பெண் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரையும் துச்சமாக மதித்து அருண் பிரசாத் மற்றும் முகிலன் இருவரும் ஆற்றில் குளித்தனர் முகிலன் அந்தப் பெண் குழந்தையுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார் அருண் பிரசாத் மற்றும் உயிருடன் கரை ஏறினார் இவர்களின் வீர செயலை பாரட்டி அருண்பிரசாத் அவர்களுக்கும் முகிலனின் குடும்பத்தாருக்கும் வெகுமதி அளித்ததுடன் தமிழக அரசின் வீரதீர செயல் புரிந்த மணபதற்கு சிபாரிசு செய்வதாகவும் காவல் துறை இயக்குனர் கூறினார்.
