விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ,இராஜபாளையத்தில் அங்கன்வாடி மையங்களை முடக்க நினைக்கும் மத்திய அரச கண்டித்து, கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே ஊரகம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் வைத்து, 100க்கும் மேற்ப்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அங்கன்வாடி மையங்களுக்கு புரியாத புது பெயர்களில் திட்டங்களை கொண்டு வந்து நிதியை குறைத்தும் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தை குழியில் தள்ளும் மத்திய அரசின் இடைக்கால் பட்ஜெட்டைக் கண்டித்து, கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு , ஒன்றியத்தலைவர் விமலா ராணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் சத்யா உள்ளிட்ட நகர மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பணியாளர்கள் நிதியை மத்திய அரசே குறைக்காதே, என கோஷமிட்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி