திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அண்ணா சிலை அருகில் அனைத்து கட்சியினர் பங்குகொண்ட தேசிய கல்வி கொள்கையை ஏற்காத தமிழ் நாட்டிற்கு (SSA திட்ட) கல்வி நிதியை தர முடியாது என சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்ளும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் வழக்கறிஞர் நா.லெனின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர இளைஞர் அணி நிர்வாகி பிரகாஷ், நகர மகளிர் அணி செயலாளர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் நீலமேகம் கலந்து கொண்டு பொதுமக்களிடையை ஆர்பாட்ட பேருரையாற்றினார்.
பொன்னேரி நகர காங்கிரஸ் தலைவர் ஜெய்சங்கர்.சி.பி.ஐ விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜீவா,திராவிடர் கழக நகர தலைவர் அருள்,புரட்சிகர விடுதலை முன்னணி மலையப்பன்,நகர துணை செயலாளர் பாலச்சந்தர்,விசிக விநாயகம்,காங்கிரஸ் செல்வகுமார், விசிக மாவட்ட சமூக பேரமைப்பு தாஸ், சமூக ஆர்வலர் முகம்மது சக்கில்,விசிக நகர துணை செயலாளர் ரமேஷ், ஆண்டார்குப்பம் முகமது கவுஸ் என்னும் பாபு, கோபிநாதன்,ராம்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர இணை செயலாளர் ஜெய்சிங் நன்றி கூறினார்.திமுக,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு