சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடியில் உள்ள இந்தோ திபத் எல்லைக்காவல் படை காவலர் பயிற்சி மையத்தில், பாரத பிரதமர், துவக்கி வைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் மத்திய அரசுப் பணிகளுக்கான பணிநியமன ஆணைகளை 253 நபர்களுக்கு
மத்திய இணை அமைச்சர் (சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல்) யு.நாராயணசாமி, வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, மற்றும் காவல்துறை துணைத்தலைவர் அச்சல்சர்மா, கமாண்டெண்ட் சுரேஷ்குமார் யாதவ், ரயில்வேதுறை (கோட்ட மேலாளர்) டி.சங்கரன், மற்றும் இந்தோ திபத் எல்லைக்காவல் படையைச் சார்ந்த துணை கமாண்டெண்ட்கள் துர்கேஷ் சந்திரா, தீபக் சிமல்டி, உதவி கமாண்டெண்ட்கள் ரோகித்குமார், ஜெயாஷ்குமார், மிருதுன்ஜெய் பேனர்ஜி, சுரேஷ்குமார், மதன்சிங் பண்டாரி, விக்ணேஷ்குமார், மரு.சாரு உட்பட அலுவலர்கள், காவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் (சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல்) பேசுகையில், பாரத பிரதமர், இந்தியாவில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி இந்தியாவினை வளாச்சிப்பாதையிலும், முன்னேற்றப்பாதையிலும் வழிநடத்தி வருகிறார்கள்.
அதன்படி, கடந்த ஒருமாத காலத்திற்கு முன்னதாக , பாரத பிரதமர், அறிவிக்கப்பட்ட திட்டம், அனைவராலும் போற்றும் வகையில் பேசப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை அதிகளவில் உருவாக்கும் பொருட்டும் அரசு பணிகளில் அவர்களை பணியமர்த்தும் பொருட்டும் உருவாக்கப்பட்ட திட்டமாக இத்திட்டம் அமைந்துள்ளது.
வீரமங்கை வேலுநாச்சியார், வீரத்தாய் குயிலி மற்றும் மருது சகோதரர்கள் ஆகியோர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்து சிவகங்கை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இன்றைய தினம் மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுசெய்யப்பட்டுள்ள நபர்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி, சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறுவது பெருமைக்குரியதாகும். இந்நிகழ்ச்சியில், வாயிலாக மத்திய அரசுப் பணிகளுக்கான உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரிவதற்கென தென்மாவட்டங்கள் மற்றும் குறிப்பிட்ட சில மாநிலங்களை சார்ந்த, தேர்வு செய்யப்பட்டுள்ள 253 நபர்களுக்கு, இன்றைய தினம் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. பாரத பிரதமர், 10,000 இலட்சம் இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் பொருட்டு, இத்திட்டத்தினை துவங்கி வைத்துள்ளார்கள். அதன்படி, இந்தியா முழுவதும் ஜம்மு காஷ்மீர், லொடாக், சீக்கீம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 45 இடங்களில் இன்றைய தினம் 71,000 இளைஞர்களுக்கு மத்திய அரசுப் பணிகளுக்கான பணிநியமன ஆணைகளை, வழங்கிட பாரத பிரதமர், வழிவகை செய்துள்ளார்கள். மேலும், இன்றைய தினம் கருமையோகி பிராரம்பா திட்டத்தினை தொடங்கி வைத்து, பயிற்சிகள் வழங்கி, அதன் வாயிலாக பல்வேறு அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பினை பெறுவதற்கான வழிவகையினையும், பாரத பிரதமர் , ஏற்படுத்தி தந்துள்ளார்கள்.
உலகளவில் பொருளாதார நாடுகளில் இந்தியா சிறந்து விளங்கிடும் வகையில் பாரத பிரதமர் , நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு மேம்பாட்டு பயிற்சிகளை மத்திய, மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்தி பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதுதவிர சுய தொழில் தொடங்கி பயன்பெறும் வகையிலும் அதற்கென அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தொழில், வேலைவாய்ப்பு ஆகியவைகளை இந்தியா முழுவதும் ஏற்படுத்தி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கென பணிகளை அனைத்து மாநிலங்களிலும் மேற்கொண்டு வருகிறார்கள். இன்றைய தினம் மத்திய அரசு பணிகளில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளை பெற்றுள்ள அனைத்து நபர்களும், தங்களது வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று வளம்பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என, மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் (சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல்) யு.நாராயணசாமி தெரிவித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி