கோவை: கோவை மத்திய சிறையில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இங்குள்ள கைதிகள் செல்போன் மற்றும் போதைப் பொருட்கள் போன்றவை பயன்படுத்தி வருகின்றனரா?
என்பது குறித்து மாதந்தோறும் சோதனை நடத்தப்படுகிறது. இதன்படி கோவை உதவி போலீஸ் கமிஷனர் திரு.சதீஷ் குமார் தலைமையில்நேற்று திடீரென போலீசார் சோதனை நடத்தினர்.
மாநகர போலீசார் மற்றும் சிறை காவலர்கள் என மொத்தம் 60 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டனர் . இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்