திருவாரூர்: திருத்துறைப்பூண்டி பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த – திருத்துறைப்பூண்டி, காமராஜர் தெருவை சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி யோகாம்பிகை (வயது-64). என்பவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மேற்படி நபர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் படி (18.08.2024) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.