திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் 15.01.2025-அன்று, காவல் உதவி ஆய்வாளர், சாகித் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது சீவலப்பேரி சாலை, மணிக்கூண்டு அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட திசையன்விளையை பகுதியைச் சேர்ந்த அய்யாக்குட்டி மகன் அங்கப்பன் (38) மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நாகராஜன் மகன் பாலமுருகன் (37) ஆகிய இருவரிடமிருந்து 21 மது பாட்டில்கள் மற்றும் ரூபாய் 1500/- ம், தச்சநல்லூர், பகுதியில் உதவி ஆய்வாளர், பழனிமுருகன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது நயினார்குளம்; டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டை கோட்டூர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் மணிகண்டன் (20) என்பவரிடமிருந்து 20 பாட்டில்கள் மற்றும் ரூபாய் 2200/- ஆகியவையும் பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்