திருவாருர்: (02.10.2025)ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி திருவாருர் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் அரசு அனுமதியோ அல்லது உரிமமோ பெறாமல் திருவாருர் உட்கோட்டத்தில் 10 வழக்குகளும், நன்னிலம் உட்கோட்டத்தில் 9 வழக்குகளும், மன்னார்குடி உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், திருத்துறைப்பூண்டி உட்கோட்டத்தில் 6 வழக்குகளும், முத்துப்பேட்டை உட்கோட்டத்தில் 2 வழக்குகளும், மதுவிலக்கு அமல் பிரிவுகளில் 10 வழக்குகள் என மொத்தம் 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில் 43 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சட்ட விரோத மதுவிற்பனையில் ஈடுபட்டவர்களிடமிருந்து 1155 மது பாட்டில்கள் (208 லிட்டர்) பறிமுதல். சட்டவிரோத மது விற்பனை மற்றும் வெளிமாநில மதுப்பாட்டில் கடத்தல், பதுக்கி வைத்தல், கஞ்சா, குட்கா, பான்மசாலா விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட் இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.