திருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 34 பேரை போலீசார் கைது செய்து, 314 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
சூதாடிய 10 பேர் கைது
அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், இன்ஸ்பெக்டர் முத்து கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சைமன், ஆனந்த ஜோதி ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கொரோன வைரஸ் பரவும் அபாயத்தை உருவாக்கி, சட்டவிரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் சூதாட்டத்திற்காக வைத்திருந்த பணம் ரூபாய் 15,000/-யும் பறிமுதல் செய்தனர்.