கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன் IPS., அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம், முழுவதும் சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்தல்,கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். அதன்படி (22.10.2022), கள்ளக்குறிச்சி மதுவிலக்குபிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு. ரவிச்சந்திரன் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திரு.மூர்த்தி, தலைமையிலான மதுவிலக்கு அமலாக்க பிரிவு தனிப்படையினர் இரகசிய தகவலின் பெயரில் கருப்பனார் கோவில் அருகில் உள்ள கனங்கூர் காட்டுக்கொட்டாய் மலைக்கோட்டாலம் பகுதியில் 1)நவீன்குமார் (எ) நவீன் 27, த/பெ முருகன் கோவில் தெரு புதுப்பேட்டை ராவுத்தநல்லூர் 2)பிரபாகரன் (35). த/பெ பாரிவள்ளல், கரியப்பா நகர், கள்ளக்குறிச்சி 3)சுரேஷ் (எ) நாமக்கல் சுரேஷ் (33), த/பெ கணபதி பாப்பங்காடு நாமக்கல் என்பவர்கள் கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்த (180ml Bottles-1152 சுமார் 208 லிட்டர்), (ID Arrack- 180 ml Bottles 1700 சுமார் 306 லிட்டர்) என மொத்தம் (2852 Bottles சுமார் 514 லிட்டர்) பாண்டிச்சேரி மது பாட்டில்கள் மற்றும் பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் (110 லிட்டர்) கைப்பற்றப்பட்டு குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.