திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கள்ளச்சந்தையில் 300-400 வரை அதிக விலைக்கு மது விற்பனை செய்வதாக அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் ஆய்வாளர் சண்முகலெட்சுமி, துணை ஆய்வாளர் பாலமுத்தையா-வுடன் காவல்துறையினருடன் விடியவிடிய கிராமம் கிராமமாக சோதனை நடத்தினர். இதில் சிப்காட் மற்றும் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தேவர்நகர் பகுதியில் வசித்து வரும் ஆனந்தஜோதி என்பவரது வீட்டில் மதுபான கடையில் விற்பது போன்று பெட்டி பெட்டியாக சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 126- லிட்டர் அளவுள்ள 1355 மது பாட்டில்களை மொத்தமாக அள்ளினர்.
மேலும் டாஸ்மாக் கடையில் உள்ளது போல அட்டை பெட்டியுடன் பெட்டி பெட்டியாக ஒரே வரிசை எண் கொண்ட பெட்டியாகவும் உள்ளது. இதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கும் ஒரு சில காவல் துறையினருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் ஆனந்த ஜோதியை கைது செய்தனர். காவல்துறையினர் மதுவிலக்கு போலீசாருடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற சமூக விரோதிகள் மீது துணிவுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்கின்றனர் இந்த அதிகாரிகளுக்கு இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா