சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்த நபர் கைது 1,081 மது பாட்டில்கள் பறிமுதல் தர்மபுரி மாவட்டம் அ.பள்ளிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மாரியம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராதா(55). என்பவர் அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி சட்ட விரோதமாக 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதையறிந்த அ.பள்ளிப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கெய்க்வாட் அவர்கள் ராதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தார். மேலும் அவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1.50 லட்சம் மதிப்பிலான 1,081 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.