செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகா பொன்விளைந்த களத்தூர் கிராமத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக செங்கல்பட்டு தாலுகா காவல்
நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் புகழ் தலைமையில் உதவி ஆய்வாளர் சதாசிவம் மற்றும்காவலர்சதீஷ். பெண் காவலர் உள்பட காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்குள்ள கடைகள் மற்றும் பொதுமக்களிடம் இங்கு மதுபாட்டில்கள் எங்கு விற்பனை செய்யப்படுதிறது என விசாரணை நடத்தினர். குணசுந்தரி என்ற பெண்ணும் சுலோச்சனா என்ற மூதாட்டியும் தான் மது விற்பனை செய்து வருகின்றனர். என தெரிவித்தனர். நேற்றைய முன்தினம் செங்கல்பட்டு கலால் போலீசார் சுலோச்சனாவை கைது செய்து அவரிடமிருந்து 720மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்றையதினம் பி.வி.களத்தூர் பவுண்டு தெருவில் வசித்து வரும் சுரேஷ் என்பவரது மனைவி குணசுந்தரி (41). என்பவரது வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது அவரது வீட்டுக்கு பின்புறம் பதுக்கி வைத்திருந்த 30ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 180ML அளவு கொண்ட 80 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குணசுந்தரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்