வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்தல் (ம) விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உதவி ஆய்வாளர் திரு. குப்பன், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் உதவி ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான போலீசார் குற்றவாளி அசோக் குமார் S/o கோபால், பேரணாம்பட்டு என்பவர் TN23AM1256 என்ற ஆட்டோவில் 236 அரசு மது பாட்டில்களை சட்டவிரோத விற்பனைக்காக ஆட்டோவில் கடத்தி வந்ததை மடக்கிப்பிடித்து மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.