ஈரோடு : ஈரோடு மாவட்டம், தாளவாடி பேருந்து நிலையம் அருகே தாளவாடி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜ் என்பவரைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர் அப்போது அவர் 144 கர்நாடக மது பாக்கெட்களை கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்து மது பாக்கெட்களையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த தாளவாடி போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி