கோவை : சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் ( 60). தொழிலாளி. நேற்று இவர் அருகில் உள்ள கடைக்கு பால் வாங்குவதற்காக சென்றார். அப்போது அங்கு குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் அவரிடம் குடிக்க பணம் கேட்டார் .ஆனால் பாஸ்கரன் பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த பாஸ்கரன் இதுகுறித்து செல்வபுரம் போலீசில் புகார் தெரிவித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அகில் (20) என்பவர் பாஸ் கரனை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அகிலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்