திண்டுக்கல்: பெங்களூரில் இருந்து தூத்துக்குடி சென்ற பெங்களூர் எக்ஸ்பிரஸ் இரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக திண்டுக்கல் இரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் இன்று திண்டுக்கல் ரயில்வே இருப்புப்பாதை காவல்துறை ஆய்வாளர் அருள்ஜெயபால் தலைமையிலான போலீசார் ரயில் பெட்டிகளில் சோதனை செய்தனர். அப்போது ரயில் பெட்டிகளில் துணிபைகளில் கர்நாடக மதுப்பாடாடில்களை கடத்தி சென்ற மதுரை, விருதுநகர் பகுதிகளை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 83 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். அதே ரயிலில் வேற பெட்டியில் மதுபாட்டில்களை கடத்திய மதுரை சோழவந்தான் சப்பானி கோவிலைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரை ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சையதுகுலாம், எஸ்.பி.தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ் குமார் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 46 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூரிலிருந்து தமிழகம் வரும் அனைத்து ரயில்களிலும் மது பாட்டில்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 800 மது பாட்டில்களை போலீசார் பிடித்தனர்.
மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற ரயில், இன்று காலை 11 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தது. அங்கு போலீசார் சோதனை செய்தனர். அப்போது ரெயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த திண்டுக்கல் பிலாத்தைச் சேர்ந்த சந்திரமோகன், பட்டி வீரன் பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய 2 பேரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 20 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா