காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு..M.சுதாகர், அவர்கள் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன்பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் மதுவேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று (14.08.2021) மதுவேட்டையில் சுமார் ரூ.34,000 மதிப்புள்ள 283 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 20 நபர்கள் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், கள்ளத்தனமாக கள்ளச்சாராயம் மற்றும் அரசுமதுபானங்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.