காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர், அவர்கள் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன்பேரில்,
மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் மதுவேட்டையில் ஈடுபட்டதில், 27 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் ரூ .24,000 / – மதிப்புள்ள 198 மதுபான பாட்டில்கள், ரூ.1,500 மதிப்புள்ள 15 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கள்ளத்தனமாக கள்ளச்சாராயம், மற்றும் அரசு மதுபானங்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்