செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு செங்கை அண்ணா போர்ட் லயன்ஸ் கிளப் சார்பில் மதுவுக்கு எதிராக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலைய பகுதியில் இருந்து புறப்பட்ட பேரணியில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கலந்துகொண்டு, துவக்கி வைத்தார். செங்கல்பட்டு நகர முக்கிய பகுதியான புதிய பேருந்து நிலையம் ,ராட்டின கிணறு , வேதாசல நகர் . உள்ளிட்ட பகுதிகளில் மாணவ மாணவிகளுடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியாக மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுத்து வந்தார்கள். மதுவிற்கு எதிரான கோஷங்கள். 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி மதுவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி பேரணியாக நடந்து சென்றனர். மேலும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கோஷங்களை எழுப்பியவாறு, மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு போதை மற்றும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு வேதாசலம் ராஜேஸ்வரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், தொடர்ந்து மாணவர்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடன காட்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், நகர காவல் ஆய்வாளர் ஹரிகரன் லயன்ஸ் கிளப் தலைவர் ஜானகிராமன் . நாடார் சங்கம் மாநில துணைத்தலைவர் உத்திரகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சுமார் 1000 பேர் வரை கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியை Lion.ஜெ. ஜான்சன் தொகுத்து வழங்கினார்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்