திருவள்ளூர்: சென்னை, சௌகார்பேட்டையில் அமைந்துள்ள “சென்னை இந்து மதுவிலக்கு நற்சங்கத்தின்” சார்பாக “மதுவிலக்கு விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம்” சங்க தலைவர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது. சங்க பொதுச்செயலாளர் சேகர் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு மீனவர் சங்கம் & பழவேற்காடு செயல்பாட்டு கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் துரை மகேந்திரன் சிறப்புரை ஆற்றி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பழவேற்காட்டில் அமைந்துள்ள கீதா மஹாலில் இருந்து புறப்பட்டு பழவேற்காடு மார்க்கெட் வரை சென்று பொதுமக்களிடையே மது குடிப்பதினால் ஏற்படும் தீமைகள் குறித்து பதாகைகள் ஏந்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஹாஜாமொய்தீன், எத்திராஜ், லல்லி, ஜெகன், அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ், ஆறுமுகம், மஞ்சு உள்ளிட்ட பழவேற்காடு செயல்பாட்டு கூட்டமைப்பு ஒருங்கிணப்பாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சட்டநாதன், குணசேகர், சுந்தர், தணிகாசலம், நாராயணசாமி சுந்தர விநாயகம், ரவி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு