திருவாரூர் : மதுவிலக்கு குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1979 மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்ட விதிகளின்படி குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்பட்டு 2023 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், (21.12.2023) திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைமைதானத்தில் பொது ஏலம் விடப்பட்டது. மேற்படி பொது ஏலமானது, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri.),*அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது திருவாரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.ஈஸ்வரன், B.E.,(தலைமையிடம்) அவர்கள், தஞ்சாவூர் அரசு தானியங்கி பணிமனையின் பொறியாளர் மற்றும் திருவாரூர் உதவி ஆணையர் (கலால்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மேற்படி பொது ஏலத்தில், இருசக்கர வாகனம் 104 மற்றும் நான்கு சக்கர வாகனம் 09 போது ஏலம் விடப்பட்டு, சுமார் 70 லட்சம் ரூபாய் அரசுக்கு ஆதாயம் செய்யப்பட்டது.