திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு மதுவிலக்கு குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1979 மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டவிதிகளின்படி குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்பட்டு 2023 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட118 வாகனங்கள் (11 நான்கு சக்கர வாகனம், 107 இருசக்கர வாகனம்) பொது ஏலம் விடப்பட்டு அரசுக்கு ஆதாயம் செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி பொது ஏலமானது, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருவாரூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்(தலைமையிடம்), தஞ்சாவூர் அரசு தானியங்கி பணிமனையின் பொறியாளர் மற்றும் திருவாரூர்உதவி ஆணையர் (கலால்) ஆகியோர் முன்னிலையில் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைமைதானத்தில் (21.12.2023) வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் பொதுஏலம் நடைபெற உள்ளது. மேற்படி பொது ஏலத்தில் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வாகன உரிமையாளர் யாரும் ஏலம் கோராத பட்சத்தில், பொது ஏலம் விடப்படும். மேற்படி ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் அவர்களது ஆதார் அட்டை அல்லது வாக்களார் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் முன்பணத் தொகையாக ரூ.1000/-ஐ (21.12.2023) வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நேரில் செலுத்த வேண்டும்.மேற்படி வாகனங்களை பொது ஏலம் அடிப்படையில் ஏலம் எடுத்துக்கொள்ளலாம் எனவும், அவ்வாறு ஏலம் எடுக்காத நிலையில் ஏலத்தில் கலந்துக்கொள்ள செலுத்தப்பட்ட முன்பணம், ஏலம்முடிந்த பின்னர் திரும்ப வழங்கப்படும். வாகனம் ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் விடப்படும் வாகனங்கள் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவற்றினை முன்கூட்டியே பார்வையிட்டு வாகனத்தினை தேர்வு செய்து ஏலத்தில் பங்கேற்கலாம். மேற்படி பொது ஏலத்தில் அதிக விலை வாகனங்கள் ஏலம் விடப்படும் என்பதால் விருப்பமுடைய பொதுமக்கள் அனைவரும் மேற்படி ஏலத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri.),*அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.