திருவாரூர்: மதுவிலக்கு குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்டம் மற்றும் மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை சட்ட விதிகளின்படி குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்பட்டு 2024 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், (18.12.2024) திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட்டது.மேற்படி பொது ஏலமானது, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri.), அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.மணிகண்டன் அவர்கள், மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A. பிலிப் பிராங்கிளின் கென்னடி அவர்கள், மாவட்ட குற்ற பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.S.பழனிசாமி அவர்கள், மதுவிலக்கு அமாலாக்க பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி V.பவானியா அவர்கள், தஞ்சாவூர் அரசு தானியங்கி பணிமனையின் பொறியாளர் மற்றும் திருவாரூர் உதவி ஆணையர் (கலால்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மேற்படி பொது ஏலத்தில், இருசக்கர வாகனம் – 140 மற்றும் நான்கு சக்கர வாகனம் – 05 பொது ஏலம் விடப்பட்டு, ரூ. 21,90,816/- அரசுக்கு ஆதாயம் தேடப்பட்டது.