கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வரமலைகுண்டா சோதனைச்சாவடி அருகில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரிடம் போலீசார் சோதனை செய்தனர். அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் பர்கூரை சேர்ந்த கவுதம் (23), என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.