மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் மது விலக்கு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் பிரிவு 14 (4) மதுவிலக்கு சட்டம்1937 பிரகாரம் பறிமுதல் செய்யப்பட்டு, நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டு தானியங்கி உதவி பொறியாளர் மற்றும் இயக்க ஊர்தி ஆய்வாளர் வல்லுனர் குழுவினரால் வாகனங்கள்
மதிப்பீடு சான்று பெற்றும், மதுரை மாவட்ட ஆட்சியர்,. திரு . அனிஸ் சேகர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், திரு.V.பாஸ்கரன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராகவும், காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தெற்கு மண்டலம் மதுரை, திரு.மகேஸ்வரன் அவர்கள், மற்றும் காவல் கூடுதல் கண்காணிப்பாளர்
தலைமையிடம்,. திரு. ரமேஷ்பாபு அவர்கள், தானியங்கி பொறியாளர் பணிமனை மதுரை,. திரு.ரவீந்திரன் அவர்கள், துணை ஆணையர் கலால் மதுரை, திருமதி. விஜயா அவர்கள், காவல் துணை கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமல் பிரிவு மதுரை மாவட்டம்,
திரு. இளவரசன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் 13.09.2021 ம் தேதி காலை 10.30 மணி முதல் 18.30 மணி வரை வாகனங்கள் பொது ஏலம் நடத்தப்பட்டது. ஏலதாரர்கள் மொத்தம் 515 நபர்கள் கலந்து கொண்டு முன் பணம் செலுத்தி ரசீதைப் பெற்றனர்.
இதில்,மொத்தம் 195 இருசக்கர வாகனங்கள், 02 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 06 நான்கு சக்கர வாகனங்கள் என, மொத்தம் 203 வாகனங்கள் அரசு நிர்ணயித்த மதிப்பீட்டை விட அதிகமான தொகைக்கு ஏலம் கேட்டகப்பட்டு சுமார் 40,00000/- (லட்சத்திற்கு) ஏலதாரர்களுக்கு வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்