தருமபுரி: தருமபுரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது பாலக்கோட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி கலையரசி அவர்கள் மாணவர் இடையே போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதை பொருளால் ஒரு குடும்பம் சீர் அழிவதோடு மட்டுமல்லாமல் இளைஞர் சமுதாயம் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்பதை பற்றியும் மாணவ மாணவர்களிடையே அறிவுரைகள் வழங்கினார். மேலும் போதை பொருள் இல்லாத மாநிலமாக நமது தமிழ்நாட்டை கொண்டுவர வேண்டும் என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர் திரு. கோபி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முருகன் தலைமை காவலர் திருமதி. ராணி திருமதி. லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்”