திருநெல்வேலி: களக்காடு காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் கீழப்பத்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழப்பத்தை பகுதி கலையரங்கம் அருகே போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் தப்பி ஓட முயற்சித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் கீழப்பத்தை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் மதி (வயது 25) என்பதும், இவர் கூடுதல் விலைக்கு விற்பதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து களக்காடு போலீசார் வழக்குப்பதிந்து,மதியை கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து 21 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.