மதுரை : மதுரை மேலவாசல் பகுதியில் முன்விரோதத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் குமார். அதே பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன், திருமலை என்ற சிலம்பரசன் இடையே முன் விரோதம் இருந்து வந்தது .இந்நிலையில்நேற்று நள்ளிரவில் பாண்டியராஜன், திருமலை என்ற சிலம்பரசன் மற்றும் சிலர் குமார் வீட்டின் முன்பாக பெட்ரோல் குண்டை வீசிவிட்டு ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக குமார் மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி