மதுரை அருகே விபத்தில் 2 பேர் பலி வெவ்வேறு சம்பவங்களில்.
மதுரை மார்ச் 27 மதுரை அருகே வெவ்வேறு சம்பவங்களில் நடந்தவிபத்தில்இரண்டுபேர்பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில்சோமநாத மங்கலத்தை சேர்ந்தவர் கண்ணன் 48. இவர் மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் .இவர்வரிச்சியூர் அருகே வந்தபோது குறுக்கே சென்ற நாய் மீது மோதி தலைகுப்புற கீழே விழுந்தார்.இந்த விபத்தில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து தொடர்பாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.l மற்றொரு விபத்து திருமங்கலம் திரளி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரம் மகன் பிச்சைமுத்து 19 .இவர் திருமங்கலத்திலிருந்து டி. கல்லுப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டியைச் சேர்ந்த முத்துவேல் 46 என்பவரை கைது செய்தனர்.
மதுரை அருகே 4 வயது சிறுவனை சூடு வைத்து சித்திரவதை செய்த தாய் வளர்ப்புதந்தை கைது.
மதுரை மார்ச் 27 மதுரை அருகே 4 வயது சிறுவனை சூடுவைத்துசித்ரவதை செய்ததாய்மற்றும் வளர்ப்புத்தந்தையைபோலீசார் கைது செய்தனர். மதுரை சமயநல்லூர் ஊர்மெச்சிகுளம் குளம் சின்னையா கோவில் தெருவை சேர்ந்தவர் சுகன்யா 20.இவருடைய கணவர் முருகன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மகளை உறவினர்கள் வளர்ப்பதாக அழைத்துச் சென்றுவிட்டனர். 4 வயது மகன் விஜய கிருஷ்ணன் மட்டும்தாய் சுகன்யாவிடம் இருந்து வந்த நிலையில் சுகன்யாவுக்கு உறவினர் கஜேந்திரனுக்கும்இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது.அவர் குடித்துவிட்டு வந்து சிறுவன்விஜய்கிருஷ்ணனை அடித்து சூடுவைத்து தொந்தரவு செய்து இருக்கிறார்.இதற்கு தாய் சுகன்யாவும்உடந்தையாக இருந்துவந்துள்ளார்.இந்நிலையில் சம்பவத்தன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த விஜயகிருஷ்ணனைஇருவரும் அடித்து இழுத்து வந்த போது கதறி அழுத சிறுவன் பக்கத்தில் இருந்தவரிடம் ஓடிச்சென்று கதறியிருக்கிறான். அவர்கள் உடனடியாக சமயநல்லூர்போலீசுக்கு தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டனர் .இந்த தகவல் அறிந்த குழந்தைகள் நல குழு உறுப்பினர் பாண்டியராஜா சமயநல்லூர் போலீசில்புகார்செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனைசித்திரவதைசெய்த தாய் சுகன்யாவையும் அவரதுஇரண்டாவது கணவர் கஜேந்திரனையும் கைது செய்தனர். சூடு மற்றும் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவனை கருமாத்தூரில் உள்ள சிறுவர் காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மதுரை அருகே சைக்கிளில் சென்ற காவலாளி மயங்கி விழுந்து பலி 27 சைக்கிளில் சென்ற போது மயங்கி விழுந்த காவலாளி பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் திருநகர்கிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் ராயப்பன் 72.இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .நேற்று திருநகர் எஸ்ஆர்வி நகரில் சைக்கிளில் சென்ற போது மயங்கி விழுந்து படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல்ராயப்பன்உயிர்இழந்தார். இதுகுறித்துஅவரதுமகன் ஜேசு கொடுத்த புகாரின் பேரில் திருநகர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணியின்போது உயிரிழந்த ஊழியர்களுக்கு நிவாரணம் பாரத் கேஸ் புதிய திட்டம் அறிமுகம்
மதுரை மார்ச் 27 பணியின் போது உயிரிழந்த ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை பாரத் கவாச் என்ற பெயரில்அகில இந்திய பாரத்கேஸ் விநியோகஸ்தர்கள் சங்கமும் தமிழ்நாடு விநியோகஸ்தர்கள்சங்கமும் இணைந்து உருவாகியுள்ளது.இந்த திட்டத்தின் முதல் பயனாக பணியில் இருந்தபோது உயிரிழந்த மதுரையை சேர்ந்த துரைப்பாண்டி என்ற டெலிவரி மேன் மற்றும்சேலத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் முதன் முதலாக இந்த நிவாரண தொகை மதுரையில் வழங்கப்பட்டது. மதுரையைசேர்ந்த டெலிவரிமேன் துரைப்பாண்டிகுடும்பத்திற்கு ரூபாய் மூன்று லட்சமும் ,சேலத்தைசேர்ந்தடெலிவரிமேன்விஜயகுமாரகுடும்பத்திற்கு,தொகை ஐந்து லட்சமும்வழங்கப்பட்டது. இந்த தொகையை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் தலைமை பொது மேலாளர் திக்விஜய் நரசிம்ஹா வழங்கினார் அவருடன் அகில இந்திய பாரத் கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் அசோசியேஷன் தலைவர் கைலாஷ் துதானி, எல்பிஜி மண்டல மேலாளர் தனபால் தமிழ்நாடு பாரத் கேஸ் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட நிர்வாகிகளும் ,டெலிவரிமேன்கள் ஏராளமானோர் இந்த நிவாரணம் வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி