காலாவதியான குளிர்பானம் விற்பனை
தட்டிக்கேட்ட வாலிபர் மீது தாக்குதல் கடைக்காரர் கைது
காலாவதியான குளிர்பானம் வழங்கியதை தட்டிக்கேட்ட வாலிபரை தாக்கிய கடைக்காரர் கைது.
மதுரை கரிசல்குளம் டீச்சர்ஸ் காலனி சேர்ந்தவர் அஞ்சலி 22..இவர் அங்கு குளிர்பான கடை நடத்தி வருகிறார் .இவர் கடைக்கு சங்கீத் நகர் நான்காவது தெருவை சேர்ந்த வினோத்குமார் 34 என்பவர் சென்றார். அங்கு குளிர்பான வாங்கினார் .அப்போது அவர் அதன் தயாரிப்புதேதியை பார்த்த போது இரண்டு வாரத்திற்கு முன்பு அதன் தேதி முடிவடைந்து இருந்தது .இதை அவர் தட்டி கேட்டார் இதனால் அஜய் ஆத்திரம்அடைந்து வினோத் குமாரைதாக்கினார். இந்த சம்பவம் தொடர்பாக வினோத்குமார் கூடல்புதூர் போலீசில் புகார் செய்யதார். போலீசார் வழக்கு பதிவு செய்து குளிர்பான கடை உரிமையாளர் அஜய்யை கைது செய்தார்.
கல்வி கடன் கிடைக்காத ஏமாற்றம் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
தெப்பக்குளத்தில் பரிதாபம்.
கல்விக்கடன் கிடைக்காத ஏமாற்றத்தில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தெப்பகுளம் தேவிநகர்மேட்டுத்தெருவை சேர்ந்தவர் காசிராஜன் மகள் தரணி 19 .இவர் கல்லூரி ஒன்றில்படித்துவருகிறார். இவர் கல்வி கடனுக்காக விண்ணப்பித்திருந்தார் .கடன் வழங்குவதற்கு இன்சூரன்ஸ் கட்டணம் மற்றும் வரிஎன ஒரு லட்சத்து 27 ஆயிரம் செலுத்தியுள்ளார் .கடன் தருவதாக கூறிய அதிகாரிகள் இவ்வாறு அந்த பெண்ணிடம் பணம் பெற்றுள்ளனர். இந்த பணத்தை செலுத்தியும் அவருக்கு கல்வி கடன் கிடைக்கவில்லை .இதனால் மனமுடைந்த தரணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை குறித்து அம்மா செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கரி மேட்டில் வீட்டு வாசலில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு
பைக் ஆசாமிகள் கைவரிசை
மதுரை வீட்டு வாசல் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மேலப்பொன்னகரம் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் ஆண்டாள் 55 . இவர் நேற்று இரவு வீட்டு வாசல் அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக பைக்கில் வந்த ஆசாமிகள் அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்று விட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக ஆண்டாள் கரிமேடு போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மதுரை கூடல்புதூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து தாலி செயின் பறிப்பு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
மதுரை கூடல்புதூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து தாலி செயின் பறித்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை பழைய விளாங்குடி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கலெட்சுமி 40 .இவர் வீட்டில் இருந்தபோது பட்டப்பகலில் வீடு புகுந்த மர்ம ஆசாமி இவர் அணிந்திருந்த ஏழரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்து ஓடிவிட்டார் இந்த சம்பவம் தொடர்பாக தங்கலட்சுமி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறித்த ஆசாமியை தேடி வருகின்றனர்.
எஸ் எஸ் காலனியில் பேசிக்கொண்டிருந்தபோதே தாக்கி செல்போன் பறிப்பு
மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் பேசிக்கொண்டிருந்தபோதே தாக்கிவிட்டு செல்போன் பறித்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். எஸ் எஸ் காலனி பாரதியார் 2-வது தெருவை சேர்ந்தவர் சபரிபாலாரத்தினம். இவர் செல்போனில்பேசிக் கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த மர்ம நபர் அவரை தாக்கி விட்டு அவர் பேசிக்கொண்டிருந்த ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றுவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சபரிபாலாரத்தினம் எஸ்.எஸ்.காலனிபோலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறித்த ஆசாமியை செயல்படுத்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி