மதுரை: மதுரை மாவட்டம் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை,மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
19.10.2021-ம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து மதுரை மாவட்டம் வில்லூர் பகுதிக்கு சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்களை கடத்துவதாக காவல் நிலைய தனிப்பிரிவு காவல் திரு.பழனிவேல் அவர்கள் கொடுத்த இரகசிய தகவலின் பேரில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன்,அவர்களின் உத்தரவின்படி, தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
அப்போது, அவர்கள் கள்ளிக்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சென்ற ஒரு காரை சோதனையிட்டதில் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 1.கேசவ பெருமாள் 23. மற்றும் 2.பாண்டியராஜன 40. என தெரியவந்துள்ளது.
மேலும் அந்த சோதனையில் அவர்கள் உள்ளூர் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை வைத்து இருப்பது தெரியவந்தது.
✍️மேற்கண்ட இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள 117 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் Renault Triber car bearing Regn. No. TN 67 BL 7158 காரையும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இது சம்பந்தமாக கள்ளிக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர், மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர், மீது
சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ. பாஸ்கரன் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்