மதுரை: மதுரை மாவட்டம், காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்ததில், கஞ்சா விற்பனை செய்த 8 பேரை கைது செய்துள்ளனர்.
1, அப்பன்திருப்பதி காவல்துறையினர் , அப்பன்திருப்பதி, பஜார் அருகே ரோந்து சென்றபோது அங்கே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சங்கையா (22) என்பவரை விசாரணை செய்தபோது, அவர் விற்பனைக்காக கஞ்சா 150 கிராம் வைத்திருந்தவரை கைது செய்துள்ளனர்.
2 ஒத்தக்கடை காவல்துறையினர் , ராஜாகூர் அருகே ரோந்து சென்றபோது, அங்கே முருகன் என்பவரிடம் இருந்து சுமார் 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
3, சிலைமான் காவல்துறையினர் , நாட்டார்மங்கலத்தில் ரோந்து சென்றபோது அழகேசன் (35) என்பவர் 1 கிலோ 250 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்து இருந்தவரை கைது செய்துள்ளனர்.
4, சிந்துபட்டி காவல்துறையினர் , கட்டதேவன் பட்டியில் ரோந்து சென்றபோது, அங்கே பாண்டி (62) என்பவர் விற்பனைக்காக 500 கிராம் கஞ்சா வைத்திருந்தவரை கைது செய்துள்ளனர்.
5, உத்தப்பநாயக்கனூர் காவல்துறையினர் , அய்யனார்குளம் அருகே ரோந்து சென்றபோது அங்கே சரசு (59) என்பவர் விற்பனைக்காக கஞ்சா 300 கிராம் வைத்திருந்தவரை கைது செய்துள்ளனர்.
6, எழுமலை காவல்துறையினர் , ஏழுமலை கோலிகண்ணு என்பவர் வீடு அருகே சென்றபோது, அங்கே கலா (42) என்பவர் விற்பனைக்காக கஞ்சா சுமார் 300 கிராம் வைத்திருந்தவரை கைது செய்துள்ளனர்.
7, விக்கிரமங்கலம் காவல்துறையினர் விக்கிரமங்கலம், கடைவீதியில் ரோந்து சென்றபோது, அங்கே எழும்பம் (எ) ஜெயக்குமார் (37) என்பவர் விற்பனைக்காக கஞ்சா 200 வைத்திருந்தவரை கைது செய்துள்ளனர்.
8, T.கல்லுப்பட்டி காவல்துறையினர் , கல்லுப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி அருகே ரோந்து சென்றபோது அங்கே ஜெயம் (56) என்பவர் கஞ்சா விற்பனைக்காக சுமார் 3 கிலோ 100 கிராம் வைத்திருந்தவரை கைது செய்தும், மேற்படி நபர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை