மதுரை : மதுரை மாநகரில் பணிபுரியும் காவலர்கள் 24 மணிநேர பணிச்சுமையின் காரணமாக அவர்களையும் அவர்களது குடும்பத்தினரின் நலனிலும் போதிய அக்கறை செலுத்தமுடியாத மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். எனவே காவலர்களின் மனநலன் மற்றும் குடும்பநலன் கருதி “ஆனந்தம்” எனும் திட்டத்தின் மூலமாக மதுரை மாநகர் ஆயுதப்படையில் உள்ள காவலர் குடும்பத்தினருக்கு உடல்நல மேம்பாடு, மனநல மேம்பாடு, சுற்றுப்புற தூய்மை மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு திட்டமிடல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) திரு. கார்த்திக் இ.கா.ப., காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) திரு.பாஸ்கரன், உதவி ஆணையர் திருமதி.லில்லி கிரேஸ் மார்டின் (Nodal Officer Anandam) Dr. C. R. Ramasubramanian, (State Nodal Officer TN PWB), மற்றும் சமூக அறிவியல் கல்லூரியின் முதல்வர்திரு.ராஜா மற்றும் 150 கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்