மதுரை : உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆனது இந்தியா முழுவதும் அச்சுறுத்தி வருகிறது இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 12 மணி வரை டீக்கடை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் மட்டும் திறந்து இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது இதையும் மீறி பலர் தேவை இன்றி இரு சக்கர வாகனங்களும் கார்களிலும் சுற்றி வருகின்றன இதனால் நோய் தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மற்றும் காவல் துறையும் இன்று முதல் அதிரடி நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளது தேவையின்றி வாகனத்தில் சுற்று அவர்களுக்கு அபராதம் விதிப்பது உடன் வாகனத்தையும் பறிமுதல் செய்ய தமிழக காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார் இதனை தொடர்ந்து மதுரை மாநகர் முழுவதும் தொடர் கண்காணிப்பில் மதுரை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றன குறிப்பாக கோரிப்பாளையம் சிம்மக்கல் காளவாசல் திருநகர் திருப்பரங்குன்றம் பழங்காநத்தம் பெரியார் பேருந்து நிலையம் தெற்குவாசல் தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விதியை மீறி சுற்றும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது .
தொடர்ந்து கண்காணிப்பது ஊரடங்கு காலங்கள் வரை நடைபெறும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருந்தபோதிலும், மதுரை புறநகர் பகுதிகளான கருப்பாயூரணி, காளிகாப்பான், ஒத்தப்பட்டி, வரிச்சூர், வண்டியூர் ஆகிய பகுதிகளில் ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றி இறக்கினர்.
மதுரை அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் அருகே ஆட்டோக்களில் பயணிகளை போலீஸார் முன்பாக ஏற்றி இறக்கினர்.
அதிகாலை முதலே இறைச்சி விற்பனைக் கடைகளில் மக்கள் கூட்டம் சனிக்கிழமை என்பதால் அதிகம் இருந்தது.
மதுரை புறநகர் பகுதிகளில் கொரோனாவை கட்டுப்படுத்த போலீஸார் ஆட்டோக்கள் இயங்குவதை கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி