மதுரை : மதுரை மாநகர் பழங்காநத்தம் வசந்த நகர் ஜெகந்திபுரம் ஆண்டாள்புரம் மாடக்குளம் பொன்மேனி பைபாஸ் சாலை, பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி, அண்ணாநகர், கோமதிபுரம், கருப்பாயூரணி, வண்டியூர், மற்றும் புறநகர் பகுதியான திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடி மின்னலில் தான் கூடிய மழை பெய்து வருகிறது. திருப்பரங்குன்றம், சிந்தாமணி விரகனூர் சாமநத்தம், பனையூர் பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக மணி நேரமாக இடி மின்னலுடன் கூடிய கூடிய பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், இன்று பகலில் வெயில் அதிகமாக இருந்ததது. இந்நிலையில், மாலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் கோடை வெயில் வாட்டிய நிலையில் தற்போது, பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மதுரையில் பல பகுதிகளில் பாதாள சாக்கடை பணிக்காக, சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் தோண்டி இருப்பதால், மழைநீர் இருப்பது பள்ளங்களில் தெரியவில்லை. ஆகவே, இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கடும் அவதியடைந்து வருகின்றனர். மதுரை அண்ணாநகர், மேலமடை வீரவாஞ்சி தெருவில், தெரு பள்ளமாக இருப்பதால், மழைநீர் தேங்கியுள்ளது. இதை மாநகராட்சி மேயர்,ஆணையாளர் தலையீட்டு, துரித நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி