மதுரை: மதுரை மாநகரில் 31 வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் திரு. வினய் IAS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து இருசக்கர வாகனத்தில்பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்பது பற்றியும் சாலை பாதுகாப்பு விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், கடந்த 2018ம் வருடத்தை விட 2019 ம் ஆண்டில் 15-/- சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது என்றும் 2019 ம் ஆண்டை விட 2020 ம் ஆண்டு 50-/-சாலை விபத்துக்கள் குறையவேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
மேலும் சாலையில் ஏற்படும் வாகன விபத்துக்களில் பெரும்பாலும் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் பலத்த தலைகாயத்தால் தான் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது. இதில் இளைஞர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தலைக்கவசம் அணியவேண்டும் என்பதன் அவசியத்தை வழியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்சிகள் மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் நடத்தப்பட்டு வருவதால் வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
[embedyt] https://www.youtube.com/watch?v=HNHyiEkiCVk[/embedyt]
மேலும் இருசக்கர வாகனத்தில் பயணிபவர்களே அதிக சாலை விபத்துக்களை சந்திக்கின்றார்கள் ஆகவே அனைத்து பொதுமக்களும் தலைக்கவசம் அணிந்து சாலையில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (ச&ஒ) திரு.கார்த்திக் இ.கா.ப, காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) திரு.சுகுமார் மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இப்பேரணியில் 520 மதுரை மாநகர பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து தமுக்கம் சந்திப்பில் இருந்து புறப்பட்டு அண்ணாசிலை, அம்சவள்ளி சந்திப்பு, கீழவாசல் சந்திப்பு, செயின்ட் மேரிஸ் பள்ளி சந்திப்பு, தெற்குவாசல், கிரைம் பிரான்ச், மதுரை கல்லூரி வழியாக சென்று C2 சுப்ரமணியபுரம் காவல் நிலைய சந்திப்பில் இப்பேரணியை சிறப்பாக முடித்தார்கள்.
மதுரை தெப்பகுளம் காவல் நிலையம் அருகில் நடைபெற்ற சாலைபாதுகாப்பு வாரவிழாவில் தெப்பகுளம் B3 கா.நி. போக்குவரத்து ஆய்வாளர். திரு. நந்தகுமார் மற்றும் தலைமைகாவலர் திரு. கணேசன் அவர்களுடன் நமது நிருபர் குமரன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் RTO போக்குவரத்துதுறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்