மதுரை : கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு மதுரை மாநகரில் பிரிவு 144 சட்டத்தின்படி தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது ஆகவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சென்று வர அனுமதிக்கப்படுவர்.
இச்சட்டத்தின்படி அத்தியாவசிய தேவைகளுக்கு அல்லாமல் மதுரை மாநகரில் சென்றுவர பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு தருமாறு கோரப்படுகிறது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வரக்கூடியவர்கள் தங்களின் பாதுகாப்பு மற்றும் இதர பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அருகில் இருப்பவர்களிடம் இருந்து தள்ளி ஒரு மீட்டர் இடைவெளியில் கடைபிடிக்கவும் முக கவசம் அணியவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் நேரடியாக சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை முற்றிலும் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்கு பதிலாக வீட்டிற்கே வந்து விநியோகம் செய்பவர்களிடம் பொருட்களை வாங்கிக்கொள்ள பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்வதற்காக அழகர்கோவில் சாலையில் உள்ள மாநகர காவல் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை நாளை 27.03. 2020-ம் தேதி முதல் செயல்பட உள்ளது.
காவல் கட்டுப்பாட்டு அறையானது காவல் ஆய்வாளர் தலைமையில் தினசரி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இந்த எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் பட்டியலை வீட்டின் முகவரி மற்றும் இதர விபரங்களை 0452-2531045 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் காவல்துறை மூலம் அதற்கான உதவிகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
இதனை பொது மக்களுக்கும் குறிப்பாக மூத்த குடிமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்